ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையின் போது கடந்த 28 ம் திகதி ஈரானிய அதி உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில் புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு நிபுணர் சபை எடுத்திருந்த நிலையில், 56 வயதான மொஜ்தபா கமேனி, தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் திரைமறைவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவராகக் கருதப்பட்டார்.
இதனிடையே அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









