திட்வா சூறாவளி அனர்த்தத்தையடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த புத்தளம் மார்க்கத்தினூடாக ரயில் சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய புத்தளம் ரயில் மார்க்கம் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் பல கட்டங்களாக நீர்கொழும்பு, கொச்சிக்கடை, நாத்தாண்டிய மற்றும் குடா வெ வ ஆகிய ரயில் நிலையங்கள் வரை ரயில்மார்க்கம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









