காட்டு யானைகள் ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகுவதை தடுக்கும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட ரயில்களில் வெப்ப கெமரா கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கென பல்வேறு செயன்முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
அதனொரு கட்டமாக ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வெப்ப கேமரா கருவிகள், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் பாதைகளில் இயக்கப்படும் பல ரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.
இச்செயற்பாடு ஒரு வாரத்திற்கு பரீட்சிக்கப்படும்.
முடிவுகளின் அடிப்படையில் கெமரா அமைப்புக்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுச்சூழல் அமைச்சின் ஆலோசகர், டொக்டர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.









