2019 ஓகஸ்ட் 02 ம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சிம் அட்டைகளையும் மீண்டும் பதிவு செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சரியான தகவல்கள் இன்றி வழங்கப்பட்ட சிம் அட்டைகளால் சட்ட விசாரணைகளுக்கு ஏற்படும் தடைகளைத் தவிர்ப்பதற்கான இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 16-17 வயதுடைய சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான சிம் அட்டை விநியோக விதிமுறைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுவரை முறையாக உள்வாங்கப்படாத 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்களைச் சந்தாதாரர்களாகப் பதிவு செய்யப் புதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதுடன் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சிம் அட்டைகளை வழங்குவதில் புதிய ஒழுங்குமுறைகள் பின்பற்றப்படும்.
இது தொடர்பான செயற்பாடுகளுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.









