கண்களில் வெண்படலப் படிவை அகற்றுதல் அல்லது கிட்டப்பார்வை தொடர்பான கண் சிகிச்சைகளின் போது கண்ணுக்கு பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 35 வகையான கண்வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்காக 05 விலைமுறிதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையால் முன்வைக்கப்பட்டுள்ள விதப்புரைகளின் அடிப்படையில், குறித்த 35 வகையான கண்வில்லைகளில் 16 வகையான கண்வில்லைகளைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகைக்கு கணிசமானளவு விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள விலைமனுதாரரான Jayasuriya Associates, Kandy மற்றும் Elshaddai Enterprises (Pvt) Ltd, Colombo இற்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.









