வரலாற்று சிறப்புமிக்க கொழும்பு, கங்காராம விகாரையில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது பாரியார் ஜலனி பிரேமதாச சகிதம் தரிசித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் மூலம் அவரது பிறந்த இடமான குஜராத் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் புனித சின்னங்கள் ‘தெவ்னி மோரி’ புனிதச் சின்னங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த வாய்ப்பை இலங்கை பௌத்த மக்களுக்கு வழிபடுவதற்காக வழங்கியமை தொடர்பாகஇ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகள் உரித்தாக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ‘தெவ்னி மோரி’ புனிதச் சின்னங்கள் பொதுமக்கள் வழிபட முடியும்









