பொலிஸ் திணைக்களம் நாளாந்தம் நாடு முழுவதும் முன்னெடுக்கும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய நேற்று (06) மாத்திரம் 27 ஆயிரத்து 430 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்போது சந்தேகத்தின் அடிப்படையில் 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புகளைகக்கொண்டுள்ள 14 பேரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 309 பேரும் மற்றும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 156 பேரும் சோதனைகளின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 79 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 826 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.









