2026 ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.
அதற்கமைய தேசிய நிகழ்வு, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை கல்வியமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இவ்வாண்டு முதல் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. வளமான நாட்டிற்குள் வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமென கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முதலாம் தரத்தில் இணையும் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி பெற்றோரின் பொருளாதாரத்தில் தீர்மானிக்கப்படக்கூடாதென சுட்டிக்காட்டிய பிரதமர்இ கல்வியிலிருந்து எந்தவொரு பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாதெனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஆறாம் தர புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டாலும், அதன் மூலம் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்போவதில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.









