முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைகள் இடம்றெவுள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அரசாங்க நிதியைச் செலவிட்டு பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு பொதுச் சொத்தை துஷ்பிரயோகம் செய்ததாகப்படும் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில், இப்பயணத்தை இவர் மேற்கொண்டிருந்ததால், 166 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியை துஷ்பிரயோகம் செய்திருந்ததாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 2025 ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டது.
பின்னர்இ முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியுடைய மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கினை 2025 ஒக்டோபர் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதுஇ இது தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 2026 ஜனவரி 28 ஆம் திகதிக்குள் றைவு செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தமது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த மனு ஒன்றை ஆராய்ந்த போதே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.
இந்த விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே, பிரித்தானியாவில் சில வாக்குமூலங்களையும் பெற்றுள்ளது.









