அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள்இ இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளன.
அத்துடன் இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படிஇ அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 1,415,584 பயனாளிகள் குடும்பங்களுக்கு 11,234,713,750.00 ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000.00 ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதேவேளை அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 248,454 பயனாளிகள் குடும்பங்களுக்கு 2,235,137,500.00 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000.00 ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாகவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.









