3 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரிஜ்வே பிளேஸ் வீதியில் திடீர் வீதித் தடையை ஏற்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , 3 கிலோ 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போதே ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஏனைய உபகரணங்களை பொலிஸார் மீட்டெடுத்தனர்.
குறித்த நபர் வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘எஸ் எப் ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.









