கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதிப் பகுதியில் புதையல் தோண்டிய 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டிய நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றுபவர்களென ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.









