டித்வா புயல் தாக்கத்தினால் ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 20 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர.
இதற்கென 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் , 32 பிரதேச மத்திய நிலையங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்த நிலைமை காரணமாகத் தேசிய அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டு போன்றவற்றைத் தொலைத்த பரீட்சார்த்திகள், தற்காலிக அடையாள ஆவணத்தைச் சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
கடந்த கால அட்டவணையில் குறிப்பிடப்பட்ட அதே நேரங்களிலேயே பரீட்சைகள் நடைபெறும்.
எனினும், பரீட்சை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதால் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்த்து கொள்ள முடியும்.









