விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தலா 2 சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பிணையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் 27 ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றுஇ 2019ம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









