கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
90 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்பிரிவினரால், கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டனர். அதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.









