Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்

தை 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
2026 பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டல்

2026ம் ஆண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை ஆரம்பம் தொடர்பான விசேட வழிகாட்டல்களைக் கல்விஇ உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை நேர நீடிப்பு தொடர்பான தீர்மானங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தரம் 5 மற்றும் தரம் 6-13 வரையான மாணவர்களுக்குப் பாடசாலை முடியும் நேரத்தைப் பிற்பகல் 2.00 மணி வரை நீடிக்க முன்னதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும்இ நாட்டில் நிலவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டுஇ 2026ம் ஆண்டில் பாடசாலை நேரம் நீட்டிக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாடசாலைகள் தற்போது நடைமுறையிலுள்ளவாறு முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மட்டுமே நடைபெறும்.

புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கமைய

தரம் 1: பிள்ளைகளை இனம் காணும் நடைமுறைகள் ஜனவரி 05 இல் ஆரம்பிக்கப்பட்டுஇ உத்தியோகபூர்வ கற்றல் நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 முதல் ஆரம்பமாகும்.

தரம் 6: 2026 ஜனவரி 21 ஆம் திகதி கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் (நிர்வாக நடவடிக்கைகள் ஜனவரி 05 முதல் தொடங்கும்).
ஏனைய தரங்கள்: 2026.01.05 ஆம் திகதி முதலாம் தவணை ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளின் நேர ஒழுங்குகளில் பின்வரும் மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:

திங்கட்கிழமை: முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை (7 பாடவேளைகள்).
செவ்வாய் முதல் வியாழன் வரை: முற்பகல் 7.30 முதல் பிற்பகல் 2.15 வரை (8 பாடவேளைகள்)இ.
வெள்ளிக்கிழமை: மத வழிபாடுகளுக்காகப் பாடசாலை நடவடிக்கைகள் முற்பகல் 11.15 மணிக்கு நிறைவு செய்யப்படும் (4 பாடவேளைகள் மட்டும்).

ஆசிரியர்களுக்கான பணி வழிகாட்டல்கள்:

புதிய சீர்திருத்தங்களின் கீழ்இ ஒரு ஆசிரியர் வாரத்திற்கு 35 பாடவேளைகளில் கடமையாற்ற வேண்டும். இதில் குறைந்தது 28 பாடவேளைகள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஒதுக்கப்பட வேண்டும்.
மேற்பார்வை ஆசிரியர்கள் வாரத்திற்கு 14 பாடவேளைகளும்இ பிரதி அதிபர்கள் 8 பாடவேளைகளும்இ உதவி அதிபர்கள் 10 பாடவேளைகளும் கற்பித்தல் பணிகளில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்ட மாற்றங்கள்:
2026 முதல் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகியவற்றுக்குப் புதிய கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

 

முந்தைய செய்தி

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்விநியோகம் தடை

அடுத்த செய்தி

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check