கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நீர்விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது.
அம்பத்தலையிலிருந்து தெஹிவளைக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய மொரட்டுவை, ராவத்தாவத்தை, சொய்சாபுர, ரத்மலானை, கல்கிஸ்ஸை, தெஹிவளை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் பத்தரமுல்லைப் பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்று நள்ளிரவுக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.









