லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் இம்மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும்இ நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு இந்நேரத்தில் விலைத் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதில்லையென லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமையஇ 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3இ690 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படவுள்ளது.
5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 1இ482 ரூபாய்க்கும்இ 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு 694 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று (1) முதல் அமுலாகும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4250 ரூபாவாகும்.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 65 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் புதிய விலை 1710 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









