சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பயங்கர வெடிப்பு சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 100 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் எல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள கிரான்ஸ்-மொன்டானா எனும் விடுதியிலேயே வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
புத்தாண்டு பிறந்து கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தில் இருந்த சந்தர்ப்பத்தில், நள்ளிரவு 0.30 மணியளவில் வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகளவானோர் சுற்றுலாப்பயணிகளென தெரியவந்துள்ளது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
எனினும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.









