2025 ம் ஆணடில் சீனா சவால்களை நேரடியாக எதிர்கொண்டு , பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளதாக சீன ஜனாதிபதி, ஷீ ஜின்பிங் தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.
மிகவும் அசாதாரணமான அழுத்தம் காணப்பட்ட போதிலும், 2025 ம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் சுமார் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் ஷீ ஜின்பிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
2024 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 5 சதவீத பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக காணப்படுமெனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனா சவால்களை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி, ஷீ ஜின்பிங் மேலும் தெரிவித்துள்ளார்.









