இலங்கை அணியின் ஆலோசகராகவும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் லசித் மாலிங்க, நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நியமனம், 2025 டிசம்பர் 15 முதல் 2026 ஜனவரி 25 வரையாக ஒரு மாத காலத்திற்கு குறுகிய கால நியமனம்மென அறிவிக்கப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க இலங்கை அணியின் தேசிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளதோடு , ஆலோசகராகவும் செயற்படவுள்ளார்.
2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ண தொடருக்கான தயார்படுத்தல்கள் மற்றும் அணியை மேம்படுத்தும் செயற்பாட்டிற்கு அவரது பங்களிப்பு காணப்படும்.









