ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர். இன்று (30) மதியம் குறித்த விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது ஓ தளத்தில் ஒரு பதிவையிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள வகையில் திறனாக நிறைவேற்றவும் புதுமையான கொள்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றதாகவும் திர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.









