கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் கோட்டை பொலிஸில் சரணடைந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னிலைப்படுத்திய போதுஇ அவரை பிணையில் விடுவிக்க அனுமதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில்இ நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் பொலிஸில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.









