Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

3 இலங்கையர்கள் கைது!

கார்த்திகை 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
13 கோடி ரூபாவுக்கும்  அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த மூன்று இலங்கைப் பயணிகளிடமிருந்து ரூ.13 கோடியே 4 இலட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான ‘குஷ்’ ரக கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் கைது

இன்று (16) அதிகாலை மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH-179 விமானத்தில் இலங்கை வந்த மாத்தளையைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்பவியலாளர் ஒருவர், விமான நிலையத்தின் Green Channel ஊடாக போதைப்பொருளைக் கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் இரண்டு பயணப் பொதிகளுக்குள் இருந்த மதுபானப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து பொதிகளில் இருந்து 4.384 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் சந்தை பெறுமதி ரூ.4 கோடியே 38 இலட்சத்து 40 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருவர் கைது

இதே விமானத்தில் பயணித்த நெடுங்கேணியைச் சேர்ந்த 35 வயதுடைய உருக்கு ஒட்டும் தொழிலாளி ஒருவரும், கண்டியைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது இரண்டு பயணப் பொதிகளுக்குள் இருந்த மதுபானப் பெட்டிகளில் நான்கு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8.664 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் சந்தைப் பெறுமதி ரூ.8 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து கடத்தல்

கைது செய்யப்பட்ட மூவரும் தாய்லாந்தில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, பின்னர் இலங்கைக்குக் கடத்தி வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முந்தைய செய்தி

மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு

அடுத்த செய்தி

தாய்லாந்தின் பூக்கெட் தீவில் பயங்கர தீ விபத்து! 11 பேர் பலி – 16 பேர் காயம்!

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
தாய்லாந்தின் பூக்கெட் தீவில் பயங்கர தீ விபத்து! 11 பேர் பலி – 16 பேர் காயம்!

தாய்லாந்தின் பூக்கெட் தீவில் பயங்கர தீ விபத்து! 11 பேர் பலி – 16 பேர் காயம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check