Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிம்பாப்வே   அணி  புதிய சாதனை! 

கார்த்திகை 10, 2026
வகை: அண்மைய செய்திகள், விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிம்பாப்வே   அணி  புதிய சாதனை! 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் நிகழ்த்தாத அபூர்வ சாதனையொன்றை சிம்பாப்பே கிரிக்கெட் அணி படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அணியாக சிம்பாப்பே மாறியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் 5ம் திகதி ஆரம்பமான போட்டி, நவம்பர் 9ம் திகதி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. பிரெண்டன் டெய்லரின் 131 ஓட்டங்கள் மற்றும் பிரையன் பென்னட்டின் 128 ஓட்டங்களின் உதவியுடன் சிம்பாப்வே அணி தமது முதல் இன்னிங்ஸில் 504 ஓட்டங்களைக் குவித்தது. அதற்குப் பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் ரஹ்மத் ஷா 173 ஓட்டங்களையும், ரஹ்மானுல்லா 113 ஓட்டங்களையும், செதிகுல்லா அடல் 105 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில் 514 ஓட்டங்களைப் பெற்று, 10 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

10 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சிம்பாப்பே அணி, மீண்டும் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. அணித்தலைவர் கிரேக் எர்வின் ஆட்டமிழக்காமல் 206 ஓட்டங்களைக் குவித்து தனது முதலாவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார்.

வெஸ்லி மதெவெரே ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார்.இவர்கள் இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 523 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி போட்டி  நிறைவடைந்தது.  பிரெண்டன் டெய்லர் ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியில் பதிவான முக்கிய சாதனைகள்:

டெஸ்ட் போட்டியொன்றின் இரு இன்னிங்ஸ்களிலும் 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற உலகின் முதல் அணி என்ற பெருமையை சிம்பாப்பே பெற்றது.

கிரேக் எர்வின் 41 வயதில் 206 ஓட்டங்களுடன் டெஸ்ட் இரட்டைச் சதம் பெற்றார். டெஸ்ட் வரலாற்றில் அதிக வயதில் இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

வெஸ்லி மதெவெரே தனது முதலாவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

எர்வின் மற்றும் மதெவெரே இணைந்து பெற்ற 208 ஓட்டங்கள், சிம்பாப்வே அணியின் டெஸ்ட் வரலாற்றில்  6வது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாக அமைந்தது.

போட்டியில் இரு அணிகளும் இணைந்து மூன்று முறை 500 ஓட்டங்களைக் கடந்துள்ளமை மற்றுமொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி ஷார்ஜாவில் ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்துள்ள சிம்பாப்பே அணியின்  சாதனை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது!

முந்தைய செய்தி

திருகோணமலையில் 40 மில்லியன் ரூபா செலவில் புதிய கால்நடை அதிகாரி அலுவலகம்..

அடுத்த செய்தி

துருக்கியில் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு: 17 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்!

தொடர்புடைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல்  நால்வர் பலி
அண்மைய செய்திகள்

கடுவலையில் தீ பரவல் நால்வர் பலி

கார்த்திகை 19, 2026
திருகோணமலையில் சிறியளவிலான நிலஅதிர்வு
அண்மைய செய்திகள்

இந்து சமுத்திரத்தில் 6.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கார்த்திகை 17, 2026
உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்
அண்மைய செய்திகள்

உயிருக்கு ஆபத்து… காலம் கடப்பதற்குள் காப்பாற்றுங்கள்!   இம்ரான் கான் அவசரக் கடிதம்

கார்த்திகை 17, 2026
சாதாரண மற்றும் உயர்தர பரீட்சை விபரங்கள்
அண்மைய செய்திகள்

அரச சேவைகளில் 974 வெற்றிடங்கள்! திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

கார்த்திகை 17, 2026
கோழியிறைச்சி முட்டை விலைகளில்  மாற்றம்
அண்மைய செய்திகள்

முட்டை விலை உயர்வு – ஒரு முட்டை ரூ.45 வரை விற்பனை!

கார்த்திகை 17, 2026
  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!
அண்மைய செய்திகள்

  லட்சக்கணக்கானோருக்கு பார்வையை மீட்டெடுக்க நம்பிக்கையளிக்கும் புதிய கண் சிகிச்சை!

கார்த்திகை 16, 2026
மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த  வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!
அண்மைய செய்திகள்

மும்பையில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த வில்லியம் – கேட் அரச தம்பதியினர்!

கார்த்திகை 16, 2026
தொழிலாளர்கள் நலன் குறித்து நாளை  விசேட கூட்டம்
அண்மைய செய்திகள்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பான அடிப்படை உரிமை மனு – பெப்ரவரி 25ஆம் திகதி மீண்டும் விசாரணை

கார்த்திகை 16, 2026
அடுத்த செய்தி
துருக்கியில் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு: 17 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்!

துருக்கியில் தொழிற்சாலையில் பாரிய வெடிப்பு: 17 பேர் உயிரிழப்பு, 12 பேர் காயம்!

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check