இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் செம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி லாகூரில் நடைபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் கமிந்து மெண்டிஸ் 131 ஓட்டங்களையும், பவன் ரத்நாயக்க 77 ஓட்டங்களையும் பெற்றனர்.
326 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பாகிஸ்தான் அணி சார்பில் பக்கர் ஸமான் 127 ஓட்டங்களையும், சாட் பெய்க் 74 ஓட்டங்களையும், ஆரஃபத் மின்ஹாஸ் 61 ஓட்டங்களையும் அதிரடியாகப் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய, இலங்கை அணியை 3 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரின் செம்பியன் பட்டத்தை வென்றது.
ஆட்டநாயகன் – பக்கர் ஸமான்
தொடர் நாயகன் – ஆரஃபத் மின்ஹாஸ்









