தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் மேலும் ஆறு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 10 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய காலநிலையால்; அதிவேக வீதிகள் உள்ளிட்ட ஏனைய வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வீதிகள் வலுக்கும் தன்மை கொண்டுள்ளதால், மழை நேரத்தின்போது முன்பக்க வாகன விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறும் பொலிசார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.








