Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

– 800க்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

புரட்டாதி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
இடிந்து விழும் அபாயத்தில் பிரதான பாலம்..

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கர பனஹ பகுதியிலுள்ள பிரதான பாலம், தற்போது மிகவும் மோசமாக சேதமடைந்து, இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாலத்தை பயன்படுத்தி, 50 ஏக்கர் பகுதியில் வசிக்கும் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800க்கும் அதிகமான மக்கள், தங்களது அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்காக தினமும் பயணித்து வருகின்றனர்.

எனினும், பாலத்தின் தற்போதைய ஆபத்தான நிலை காரணமாக, தங்களது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த டிட்வா சூறாவளியின் போது இந்தப் பாலம் ஓரளவு சேதமடைந்ததாகவும், பாலத்தின் நிலைமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும், இதுவரை நிரந்தரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதற்கிடையில், கடந்த மூன்று நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையுடன் பாலத்தின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்துள்ளதுடன், இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாலத்தின் மேலாகவும் வெள்ளநீர் பாயும் அபாயகரமான நிலை காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக, குறிப்பிட்ட காலங்களில் பாலத்தின் ஊடாக பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தை ஆய்வு செய்து, தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிரந்தர புனரமைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

தொடர்புடைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய
அண்மைய செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அரசாங்கம் முன்னுரிமை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புரட்டாதி 23, 2026
அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்
அண்மைய செய்திகள்

அமெரிக்கா சென்றடைந்தார் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்

புரட்டாதி 23, 2026
தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!
அண்மைய செய்திகள்

தேசிய விருது மேடையில் தனுஷுக்கு இரட்டை கௌரவம்!

புரட்டாதி 23, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்
அண்மைய செய்திகள்

  நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

புரட்டாதி 23, 2026
மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி
அண்மைய செய்திகள்

மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையே பொக்சிங் போட்டி

புரட்டாதி 23, 2026
கெப்பித்திகொல்லாவயில் கோர விபத்து தாய்சேய் உள்ளிட்ட மூவர் பலி
அண்மைய செய்திகள்

மோட்டார் சைக்கிளின் பின்சக்கரத்தில் ஆடை சிக்கியதில் மாணவி உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு
அண்மைய செய்திகள்

அம்பிகா மீதான மோசடி முறைப்பாடு தொடர்பில் நடிகை ராதாவுக்கு பொலிஸ் அழைப்பு

புரட்டாதி 23, 2026
இறக்குமதி மோசடி   23 பில்லியன் ரூபா வெளிநாடுகளுக்கு பரிமாற்றம்?
அண்மைய செய்திகள்

ரூ.24.8 பில்லியன் வெளிநாட்டு நிதிப் பரிமாற்றம் – கொட்டிக்காவத்தையில் ஒருவர் கைது!

புரட்டாதி 23, 2026
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.