மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே சண்டை நடைபெற்றால் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் வித்தியாசமான பொக்சிங் போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சுமார் ஆறு அடி உயரம் கொண்ட மனித உருவிலான ரோபோவுக்கும், பொக்சர் ஒருவருக்கும் இடையே இந்தப் போட்டி நடைபெற்றுள்ளது.
மனிதரைப் போன்று ரோபோவும் குத்துக்களை வீசி போட்டியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
ரோபோவின் அசைவுகள் மற்றும் பொக்சிங் திறமையைப் பார்த்து சமூக வலைத்தளப் பயனர்கள் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கும் மனித உருவிலான ரோபோக்களுக்கும் இடையிலான போட்டிகள் எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதற்கான ஒரு முன்னோட்டமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.








