ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று காலை பாராளுமன்ற சபை அமர்வுகள் ஆரம்பமானபோது, சபாநாயகர் முன்னிலையில் சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் தனது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வந்த எம்.எஸ். அப்துல் வாஸித் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீப் ரிஃபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பிரதிநிதியாக ஹபீப் ரிஃபான் பாராளுமன்றத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.









