நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய சூரை மீன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சூரை மீன் (Tuna):
155 கிராம் நிகர எடை கொண்ட ஒரு டின்னின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகும்.
425 கிராம் எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட டின் மீனின் விலை ரூ. 510 ஆகும்.
ஜெக் மெக்கரல் மீன் (Jack Mackerel):
155 கிராம் நிகர எடை கொண்ட ) ஒரு டின்னின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 260 ஆகும்.
425 கிராம் டின்னின் விலை ரூ. 600 ஆகும்.
டின் மீன் வகைகளை இந்த விலைகளை விட அதிக விலையில் விற்கவோ, விற்பனைக்கு வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.









