2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள், 2027ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கை தொடர்பான இணைய விண்ணப்ப முறை அறிவிப்புகள் வெளிவரும் வரை காத்திருக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழி (Online) மூலமாகவே கோரப்படவுள்ளன.
அத்துடன், அடுத்த ஆண்டு தரம் 6 இல் தமது பாடசாலைகளில் சேர விரும்புவோருக்கான விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களும் இந்த நவீன முறையின் ஊடாகவே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் திகதிகள் மற்றும் செயல்முறை குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் உரிய காலத்தில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
#Grade6Admission #ScholarshipExam #EducationMinistry #SriLankaNews #BreakingNews #SchoolAdmission2027 #EducationUpdate









