வறட்சியான வானிலையால் இதுவரை சுமார் 8,000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த பயிர்ச் சேதங்களுக்கென அவசர வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
துரித வேலைத்திட்டத்தின் கீழ் பயிர்ச் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நெல்இ, சோளம்,பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்மென அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும்,பயிர்ச் சேதங்களினால் இதுவரை அதிகளவிலான பாதிப்பு அனுராதபுரம் மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அம்மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.









