மலையகத்தின் கலை ,இலக்கியம், சிற்கதை, நாவல், நாடகம், திரைப்படம், தொழிற்சங்கம், அரசியல், மொழி பெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்ட மூத்த எழுத்தாளரும், கலாபூஷணம் மற்றும் சாகித்ய ரத்னா விருதுகள் பெற்றவருமான மு.சி. என்று சிறப்பிக்கப்படும் மு.சிவலிங்கத்தின் அமுதவிழா நிகழ்வுகள் இன்று 27 ஆந் திகதி வியாழக்கிழமை பூரணை தினத்தன்று அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கலையரங்கத்தில் காலை இடம்பெற்றது.









