கெப்பித்திகொல்லாவ பகுதியில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
பதவிய சிறிபுர பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிஇ அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









