நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலை குறித்து மிகவும் அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அங்குள்ள இலங்கையர்களுக்கு காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
அபாயகரமான மாவட்டங்களில் அல்லது அதற்கு அருகில் வசிக்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் இலங்கையருக்கு அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்புத் தேவைப்பட்டால், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேரமும் செயற்படும் 10977 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவோ உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும் நேபாளத்தைப் பாதித்துள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலைமையினால் எந்தவொரு இலங்கையருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை பதிவாகவில்லை என காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.









