துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த பஸ் லலித் என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்
பஸ் லலித்திடம் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.









