காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹியங்கனை – மாப்பாக்கடவௌ பகுதிக்கு அருகிலுள்ள பாறையொன்றில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட வைத்தியர் நேற்று காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும் அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.
அதனையடுத்து வைத்தியரின் கார்பயணித்த திசை தொடர்பில் CCTV காட்சிகளை வைத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.









