கொழும்பு கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த பணப் பரிமாற்ற நிலையம் ஒன்றின் ஊடாக, இலங்கைக்கு எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்யாமல் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பல வங்கிச் சேவைகள் மற்றும் கணக்குகள் ஊடாக இந்தப் பாரியளவிலான பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இவ்வளவு பெரிய தொகை, அதற்குரிய பொருள் இறக்குமதி எதுவுமின்றி எவ்வாறு வெளிநாட்டுக்கு மாற்றப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை FCID தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.









