இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் புளோரஸ் பகுதியில் நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் அனர்த்த விபரங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே கடந்த 15ம் திகதி 7.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதையடுத்து, அடுத்தடுத்து மேலும் பல அதிர்வுகள் ஏற்பட்டன.
இதனால் 53 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தற்போது மற்றுமொரு அதிர்வு பதிவாகியுள்ள நிலையில், மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








