இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய விலை திருத்தத்தின்படி, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் தற்போது சந்தையில் உள்ள எந்தவொரு இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பைக்கட்டின் விலையும் அதிகரிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்திற்குள் திருத்தப்பட்ட விலையில் பால்மா சந்தைக்கு வெளியிடப்படுமென அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும், டொலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், எதிர்காலத்தில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பால் தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.









