மஹபொல புலமைப்பரிசில் மூலம் பயன்பெற்ற பழைய மாணவர்களையும் , தற்போது பயன்பெற்று வரும் மாணவர்களையும் ஒரே வலையமைப்பிற்குள் கொண்டுவரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘என்னிடமிருந்து மஹபொலவிற்கு, மஹபொலவிலிருந்து பிள்ளைகளுக்கு’ மஹபொல பழைய மாணவர்கள் இணையத் தளத்தினை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
மஹபொல பழைய மாணவர் வலையமைப்பின் ஊடாக, மஹபொல நிதியமானது வெறும் நிதி உதவியுடன் மாத்திரம் நின்றுவிடாது, அதற்கு அப்பால் சென்று, அதன் மூலம் உதவிபெறும் மாணவர்களின் ஏனைய தேவைகளுக்கும் ஒரு பக்கபலமாக அமையும் வகையில் அதனைக் கட்டியெழுப்புவதே நோக்கமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹபொல மூலம் பயன்பெற்ற பழைய மாணவர்களுக்கு கிடைத்த புலமைப்பரிசிலை உங்களுக்கு மாத்திரம் கிடைத்த ஒன்றாகக் கருதாது, இதன் ஊடாக உங்களது உயர்கல்விக்கான பிரவேசத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், உங்களிடமிருந்து நாட்டிற்கு ஒரு சேவை கிடைப்பதையே எதிர்பார்ப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.









