Indru
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
Indru
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்

சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்

சித்திரை 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை, முதன்மை செய்தி
A A
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்

சிவனொளிபாத மலை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய பல இடங்களில் கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக  அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா செயலணிக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

சிவனொளிபாதமலையை மையப்படுத்தி கேபிள் கார் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு நீண்டகாலமாக பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக கிகிலியாமான, எல்ல உள்ளிட்ட மேலும் சில சுற்றுலாத் தலங்களும் இவ்வாறான கேபிள் கார் திட்டங்களை ஆரம்பிக்கக்கூடிய இடங்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடங்களில் அந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், அதற்குத் தேவையான ஆரம்பகட்ட அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அது தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இதனிடையே மே மாதம் 25ஆம் திகதி முதல் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த வசதியை வழங்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யால உள்ளிட்ட 19 வனவிலங்கு சரணாலயங்களில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்கள் அனைத்திலும் உள்ள மலசலகூடங்கள் உள்ளிட்ட சுகாதார வசதிகளின் பராமரிப்புப் பணிகள் தனியார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ,குறிப்பிடப்பட்டதுடன், அந்த இடங்களில் புதிய மலசலகூடங்களை நிர்மாணிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இது ஒரு சிறிய பிரச்சினையாகத் தோன்றினாலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதில் இது மிக முக்கியமானதொரு விடயம் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.
கொள்ளுப்பிட்டியிலிருந்து கடற்கரை வீதி ஊடாக, சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் சுற்றுலா வலயம் ஒன்றை நிறுவுவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் மூலம் சுமார் 2000 முதல் 3000 வரையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி

பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

அடுத்த செய்தி

ஹட்டன் – டிக்கோயா வீதியில் பாரிய பஸ் விபத்து.

தொடர்புடைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!
அண்மைய செய்திகள்

பெல்மதுளையில் பாரிய மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்!

புரட்டாதி 30, 2026
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி
அண்மைய செய்திகள்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எல் மன்சூரி

புரட்டாதி 30, 2026
ரணில் விக்ரமசிங்கவுக்கு   எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
அண்மைய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

புரட்டாதி 30, 2026
பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மைய செய்திகள்

பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புரட்டாதி 29, 2026
கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 122 மெட்ரோ பேருந்துகள் சேவையில்

புரட்டாதி 29, 2026
ரேணுக பெரேரா பிணையில் விடுதலை
அண்மைய செய்திகள்

ரேணுக பெரேரா பிணையில் விடுதலை

புரட்டாதி 29, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!
அண்மைய செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்!

புரட்டாதி 29, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம்  …
அண்மைய செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் …

புரட்டாதி 29, 2026
அடுத்த செய்தி
ஹட்டன் – டிக்கோயா வீதியில் பாரிய பஸ் விபத்து.

ஹட்டன் - டிக்கோயா வீதியில் பாரிய பஸ் விபத்து.

  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • பாடசாலை நிகழ்வுகள்
  • நேர்காணல்

© 2024 Real Ideas Studio | Crafed with 🤍 by TecMose.

imunify-bot-check