அரச அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச அமைதிக்கான நடைப்பயணம் இன்று தம்புள்ளையில் ஆரம்பமானது.
இன்று காலை 6.30 மணிக்கு தம்புள்ளை ரஜமஹா விகாரையில் மகா சங்கத்தினருக்கான தானம் வழங்கப்பட்ட பின்னர், ஆரம்பமானது.
அதற்கமைய மாத்தளை அலுவிஹாரை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை, கேகாலையிலுள்ள பெலிகம்மன ரஜமகா விகாரை, தோலங்கமுவ மத்திய கல்லூரி, யக்கல சந்திரஜோதி விகாரை ஆகிய இடங்களின் ஊடாக களனி ரஜமகா விகாரையை சமாதான பாதயாத்திரை சென்றடையவுள்ளது
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான பௌத்த தேரர்களுடன் ‘ஆலோகா’ (,எனும் நாயும் ,அமைதி நடைப்பயணத்தில் இணைந்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மற்றும் முப்படைகள் உட்பட பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்கு ஆதரவை வழங்குகின்றன.








