நிக்கவரெட்டிய, கொபேகனே பகுதியில் அமைந்துள்ள தெதுறு ஓயா ஆற்றில் நீராடச்சென்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஆற்றில் நீராடச் சென்ற கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக 10 பேர் நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய நிலையில் இருந்த மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகளை பிரதேச மக்களும் பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது மகன் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.









