2023/2024 க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 ம் திகதி முதல் 2026 மே 08 ஆம் திகதி வரை கல்வியியற் கல்லூரிகளில் நடைபெறவுள்ளன.
நேர்முகப்பரீட்சைக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து நாகரீகம், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில், அது தொடர்பான அறிவித்தலை உரிய கல்லூரிக்கு உரிய வழிமுறைகளை பின்பற்றி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.









