லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,070 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 5,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 418 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு புதிய விலை 2,280 ரூபாவாக உயர்ந்துள்ளது.
உலக சந்தை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சந்தையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டால் அதன் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லாப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை லாப் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 775 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 4,765 ரூபாயாக இன்று நள்ளிரவு முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் 308 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,910 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 140 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 890 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.









