இந்தோனேசியாவில் 7.2 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் சடக்கு மொலுக்கான கடற்பகுதியில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவின் டெர்னேட் நகரத்தின் வடமேற்கு திசையில் சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் நிலஅதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா கடற்கரைப் பகுதிகளில் சுனாமி தாக்கம் ஏற்படலாமென அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எதிர்வுகூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு;ளள்ளன.
அத்துடன் இந்தோனேஷியாவின் சில கடற்கரைப் பகுதிகளில் கடல் மட்டத்தை விட 0.3 மீட்டர் முதல் 1 மீட்டர் உயரம் வரை அலைகள் ஏற்படக்கூடுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









