ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைதந்துள்ளார்.
நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விமான நிலையத்தில் வரவேற்றார்.“இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் ஒரு தீர்க்கமான தருணத்தில் தான் அந்நாட்டுக்கு பயணிப்பதாக” மசாடோ காண்டா, தனது விஜயம் குறித்து ‘x’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், தொடர்பாடல்களை மேம்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் திரட்டுவதன் மூலம் இலங்கையின் இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ காண்டா தெரிவித்துள்ளார்.









