T-20 உலகக்கிண்ண தொடரில் இலங்கையணி பங்கேற்ற முதலாவது போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. அயர்லாந்து அணிக்கெதிராக குழு பீயில் நேற்றைய தினம் இலங்கையணி போட்டியிட்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதனடிப்படையில் இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த நிலையில் 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. குசல் மென்டிஸ் 56 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்த்துவதற்கு பங்களிப்பு வழங்கினர். 164 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கடடுகளையும் இழந்து 143 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது. ஹெரி டெக்டர் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். பொட்டியின் ஆட்டநாயகனாக கமிந்து மென்டிஸ் தெரிவானார். நேற்றைய தினம் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து நேபாள அணியை போராடித்தோற்கடித்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.









